மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான இடைக்கால டிவிடென்ட் தொகையாக ரூ.28,000 கோடியை மத்திய அரசுக்கு தருவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதலும் அளித்ததுள்ளது. கடந்த நிதி ஆண்டில் அரசுக்கு இடைக்கால டிவிடென்டாக ரூ.10,000 கோடியை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்க இன்னும் சில பெரிய அளவிலான வங்கிகள் தேவை என்று தெரிவித்தார். மேலும் தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கி இணைப்பை பற்றி பேசிய அவர், இந்த மூன்று வங்கிகள் இணைப்புக்கு பிறகு எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய வங்கிகளுக்கு அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த இந்த மூன்று வங்கிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.