Published on 20/09/2018 | Edited on 20/09/2018

தனியார் துறை வங்கியான எஸ் பேங்க்கின் (Yes Bank) தலைமை செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் ராணா கபூரே அடுத்த வருடம் ஜனவரி 31 வரை நீடிப்பார் என்று ஆர்.பி.ஐ. அனுமதி அளித்துள்ளது. ஆனால், ராணா கபூர், தன் பதவிக்காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு அதாவது 2021 வருடம் ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிக்குமாரு கோரிக்கை வைத்திருக்கிறார். வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தனியார் வங்கி இயக்குனர்கள் குழு கூடவுள்ளதாகவும் அதில்தான் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ராணா கபூர்' கடந்த 2004-ல் இருந்து எஸ் பேங்க்கின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடுத்தக்கது.