Published on 01/06/2021 | Edited on 01/06/2021

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதியானது. சிகிச்சைக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்ட அவர், தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனாவிற்குப் பிந்தைய பாதிப்புகளால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.