சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீன பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனப் பொருட்களை மக்கள் அடித்து உடைக்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதே கருத்தை முன்வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "சீனா துரோகமிழைக்கும் நாடு. சீனாவில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் சீன உணவை விற்கும் அனைத்து உணவகங்களும் ஹோட்டல்களும் மூடப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.