Published on 18/12/2019 | Edited on 18/12/2019
20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த ராமர் கோயில் வழக்கில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குள்ளாகி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா விண்ணை முட்டுமளவுக்கு ராமர் கோயில் விரைவில் அயோத்தியில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் " ராமர் கோவில் கட்டுவதற்கு சிலர் மட்டுமே காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த கோடிக்கணக்கான கரசேவகர்களே அதற்கு காரணம். ஆகையால் தனி ஒரு இயக்கம் இதற்கு உரிமை கோர இயலாது" என்று தெரிவித்தார்.