Published on 06/08/2021 | Edited on 06/08/2021

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்நிலையில், இந்த விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி இன்று (06.08.2021) அறிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி, ‘தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தயான் சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்க நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு குடிமக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் பெயர் மாற்றப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தயான் சந்த் உலகின் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.