காஷ்மீரில் போர் நிறுத்த கொள்கையில் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் பாஜக மற்றும் மஜக உடனான கூட்டணி முறிந்ததாக காஷ்மீர் பாஜக மாநில பொறுப்பாளர் ராம் யாதவ் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து காஷ்மீரில் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பெரும்பான்மை இல்லாததால் மெகபூபா முஃப்தி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார் அதனை பெற்றுக்கொண்ட ஆளுநர் என்.என் போரா அந்த கடிதத்தை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்தார்.
மேலும் குடியரசு தலைவரிடம் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியமைய ஒப்புதல் கோரியிருந்தார் ஆளுநர் என்.என் போரா. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் இன்று காலை, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கினார். மேலும் தனது இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.