Skip to main content

பிரியங்காவிற்கு பொறுப்பு; ராகுல் காந்தியின் கருத்து...

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

thtrh

 

காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரபிரதேச பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது என கூறி சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டன. இதனையடுத்து காங்கிரஸ் தனியாக போட்டியிட போவதாக அறிவித்து தற்போது பிரியங்கா காந்திக்கு கட்சி பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், 'உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி எனக்கு உதவி செய்யப்போகிறார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவரால் மிகச்சிறப்பாக செயல்பட முடியும். மேலும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜக -வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே உத்தரபிரதேசத்தில் கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸுக்கும், அவர்களுக்கும் எந்தஒரு விரோதமும் கிடையாது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதே எனது பொறுப்பாகும்' என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்