எந்த தைரியத்தில் சீனா இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமருக்குக் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே பதட்டமான சூழல் நிலவிவந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்..? ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறார்? என்ன நடந்தது என்று நமக்குத் தெரிய வேண்டும். எந்த தைரியத்தில் சீனா நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது? எப்படி அவர்கள் நமது நிலத்தை அபகரிக்கலாம்?" என அடுக்கடுக்கான கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார்.