புதுச்சேரி - இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி கார் மீதான தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரசார் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக கடற்கரை காந்திசிலை அருகே வாயில் கருப்புத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
சுந்தரபாண்டியன்