Published on 01/11/2021 | Edited on 01/11/2021

புதுச்சேரி விடுதலைநாளையொட்டி, அங்குள்ள அரசு கட்டடங்களும், தலைவர்களின் சிலைகளும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுதலையானது. விடுதலைநாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
விடுதலை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாரதியார் போன்ற தேசத் தலைவர்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.