Skip to main content

பப்ஜி விளையாடிய மாணவர்கள் கைது...!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

பப்ஜி விளையாடியதாக கடந்த இரண்டு நாட்களில் 10 கல்லூரி மாணவர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

pubg

 

பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல் வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.

 

அதன்படி நாட்டிலே முதல் முறையாக கடந்த ஆண்டு வேலூர் பல்கலை கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் மாவட்டத்தில் இந்த விளையாட்டை மார்ச் 9-ம் தேது முதல் தடைவிதித்தது அந்த மாவட்ட நிர்வாகம். இது தவிர்த்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியிலும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு முன்னதாக நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் தடையை மீறி பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாட்களில் 6 கல்லூரி மாணவர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமின் பெற்று பின்னர் விடுதலை ஆனார்கள். 

 

இந்த கைது நடவடிக்கை என்பது எச்சரிக்கை நடவடிக்கைதான். இதன்பின்னும் தடையை மீறி பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டால் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்