Skip to main content

''தமிழ்நாட்டிலேயே இந்த திட்டம் நிலுவையில்தான் இருக்கு; இது அண்ணன், தங்கச்சி பிரச்சனை'' - தமிழிசை பேட்டி

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 This project is pending in Tamil Nadu itself; This is brother sister problem'' - Tamilian interview

 

புதுவை முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் இருப்பது அண்ணன், தங்கச்சி பிரச்சனைதான் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 'எப்போதுமில்லாத இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறோம். இதற்கு முன்னால் இருந்ததை விட 2,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பல திட்டங்கள்.. ஸ்மார்ட் சிட்டியாக இருக்கட்டும், சாலை வசதியாக இருக்கட்டும், பொதுப்பணித்துறை அமைச்சர் நேற்று இவற்றையெல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியலிட்டிருக்கிறார். இவை எல்லாம் ஆளுநரின் ஒத்துழைப்பாலும் மத்திய அரசின் ஒத்துழைப்பாலும் தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுப்போம் என்பது வாக்குறுதியாக தான் இருக்கிறது. இரண்டு வருடம் ஆகியும் அதற்கு இன்னும் கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இங்கு முதலில் ஒரு 18 ஆயிரம் பேர் என்றார்கள். ஆனால் தற்பொழுது ஏறக்குறைய 65,000 பேருக்கு 1000 ரூபாய் உடனே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றுவதால் தான் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிடவில்லை.

 

முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் இருக்கின்ற பிரச்சனை அண்ணன், தங்கச்சிக்குள்ளே இருக்கிற பிரச்சினை தான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது. சின்ன சின்ன சுணக்கம் வரலாம். ஆனால் மத்திய அரசின் சில வழிகாட்டு முறைகள் இருக்கிறது. நீதிமன்றத்தின் வழிகாட்டு முறைகள் இருக்கிறது. அண்ணன் முன்பு முதலமைச்சராக இருந்தபோது சில வழிகாட்டு நெறிமுறைகள் கிடையாது. நீதிமன்ற வரையறைகளும் கிடையாது. அதே முறையில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஆதங்கம் தான். மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. பெஸ்ட் புதுச்சேரி என மோடி சொன்னார். ஆனால் நான் அதிகாரிகளை கூப்பிட்டு பாஸ்ட் புதுச்சேரியா இருக்கணும் என்று சொல்லியிருக்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்