Published on 27/04/2019 | Edited on 27/04/2019
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து அன்று மதியமே உத்தவ் தாக்ரே முன்னிலையில் அவர் சிவசேனாவின் இணைந்தார்.
இதுகுறித்து பேசிய பிரியங்கா, மிக நீண்ட முடிவுக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்திருந்தார் பிரியங்கா. இவரது புகாரை அடுத்து அந்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் இணைத்ததால் பிரியங்கா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனாவின் இணைந்த அவருக்கு ஒரு வாரத்திலேயே அக்கட்சியின் துணை தலைவர் பதவி வழக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.