Skip to main content

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்; குடியரசு தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி...

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

hhggh

 

இந்திய சுகந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நேதாஜிக்கு அஞ்சலி செலுத்தி செய்துகுறிப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்து குடியரசு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று எனது வணக்கத்தை அவருக்கு உரித்தாக்குகிறேன். நமது மிகவும் நேசமான தேசியத் தலைவர்களில் ஒருவராகவும், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் முக்கிய போராளியாகவும் அவர் இருக்கிறார்.  அனைவராலும் நேசிக்கப்பட்டவர் நேதாஜி, இன்றும் நம் நாடும், நாட்டு மக்களும் அவரை விரும்புகின்றனர்' என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று நான் அவரை வணங்குகிறேன். இந்தியா சுகந்திரமாகவும் கண்ணியமாகவும் வளர தனது வாழ்வை அர்ப்பணித்தவர் அவர்.  அவருடைய கொள்கைகளை பூர்த்தி செய்வதற்கும், வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்' என பதிவிட்டுள்ளார். மேலும் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டையில் நேதாஜி நினைவாக அருங்காட்சியகம் ஒன்றையும் பிரதமர் இன்று துவக்கி வைத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்