புதிய கல்வி கொள்கை தொடர்பாக வரும் ஏழாம் தேதி மாநில ஆளுநர்களுடன் குடியரசு தலைவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்திய கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன. அதேபோல பல்வேறு மாநிலங்களிலும் இந்த கல்விக்கொள்கையின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் ஏழாம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் ஆளுநர் என்பதால், அவர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏழாம் தேதி நடைபெறும் இந்தக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார்.