ஆர்.எஸ்.எஸ் கொள்கை தவறு என்பதை பிரணாப் வெளிப்படுத்தியுள்ளார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நாக்பூரில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும்.
மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றார். பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்பதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த காங்கிரஸ் நிகழச்சியில் பிரணாப் ஆற்றிய உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில்,
ஆர்.எஸ்.எஸ் கொள்கை தவறு என்பதை பிரணாப் வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்று கூறியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் கொள்கை தவறு என பிரணாப் விமர்சித்துள்ளார் என அவர் அதில் கூறியுள்ளார்.