Skip to main content

ரூ.1 நஷ்டஈடு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்த வழக்கு!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

நடிகர் பிரகாஷ்ராஜ் மைசூரு தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிம்கா மீது அவதூறு வழக்கு பதிந்துள்ளார்.

 

Prakashraj

 

நேற்று மைசூரு தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிம்கா மீது நடிகர் பிரகாஷ் அவதூறு வழக்கைப் பதிவு செய்திருந்தார். அந்த வழக்கில் ரூ.1 நஷ்ட ஈடு கோரியிருந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் கோடிகோடியாக பணம் சேகரிப்பதற்காக இந்த வழக்கைப் பதிவு செய்யவில்லை. சமூகத்தில் மிக முக்கியமான, அந்தஸ்துள்ள பொறுப்பில் உள்ள நபர், சமூக வலைத்தளங்களை சொந்தத் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்பதை உணர்த்துவதுதான் என் நோக்கம்’ என்றார். 

 

பிரதாப் சிம்கா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரகாஷ்ராஜின் மகன் மரணத்திற்கு அவரேதான் காரணம் என அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டிருந்தார். இதைக் கண்டிக்கும் விதமாக இந்த வழக்கை அவர் தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் முன்வைத்து வருகிறார். அப்போதிருந்தே பிரகாஷ்ராஜ் உடன் பிரதாப் சிம்கா வார்த்தை சண்டைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்