மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், 24 மணி நேரமும் மக்களுக்கு மாநில அரசு மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களாக டெல்லியில் நடந்து வருகிறது.
மாநில மின்சாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மாநிலங்களுக்கு மின்சாரம் மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு; மின் வழித்தடம் அமைப்பது, உள்ளிட்ட விஷயங்களை குறித்து கலந்து ஆலோசித்தார்.
அந்த மாநாட்டில் பேசிய மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், “மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தங்கள் மாநில மக்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்கான மின் மோட்டாருக்கான மின் இணைப்பு தவிர்த்து மற்றவர்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். விவசாய மின் மோட்டார்களுக்கு 8 முதல் 10 மணி நேரம் மின்சாரம் வழங்கினால் போதுமானது” என மின்சார துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், தெரிவித்துள்ளார்.