Skip to main content

பாஜக கொள்கைக்கு எதிராக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்: ராகுல்காந்தி

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
பாஜக கொள்கைக்கு எதிராக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்: ராகுல்காந்தி



பாஜக கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துளார்.

இதுகுறித்து இன்று சிம்லாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியபோது,

நாட்டின் பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. வேலைகளை உருவாக்குவதில் நாம் சீனாவுடன் கடும் போட்டி போட வேண்டும். பாஜக கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். அன்பு மற்றும் மரியாதையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவே காங்கிரசின் கொள்கை.

கட்சியில் மக்களுக்காக உழைப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை போன்றவர்கள் உயர்த்த வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருப்பதால், மக்களின் உரிமைகளுக்காக போராட இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  மக்கள் தான் நமது எஜமானார்கள் என நாம் அனைவரும் கருத வேண்டும். இதன் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயல்பட்டு, காங்கிரஸ் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நான் அனைவரும் இணைந்து செயல்பட முடியும் என்பதை குஜராத் தேர்தலில் கற்று கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்