உக்ரைன் போர் சூழல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவுப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.