Skip to main content

காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்கு சணல் பாதணிகளை அனுப்பிய பிரதமர் மோடி !

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

foot wear

 

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று, அங்கு விரிவுபடுத்தப்பட்டு வரும் கோயில் வளாகத்தின் முதல் பகுதியை திறந்து வைத்தார். அப்போது அந்த வளாகத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் உணவும் அருந்தினார். இந்தநிலையில் பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோவிலில் வளாக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சணல் பாதணிகளை அனுப்பியுள்ளார்.

 

விஸ்வநாதர் கோவிலுக்குள் தோல் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட செருப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்திற்குள் பணியாற்றுபவர்கள் வெறுங்காலோடு பணியாற்ற வேண்டிய நிலை நீடித்து வந்துள்ளது. இதனையறிந்த மோடி, கோவிலில் பணியாற்றும் பூசாரிகள், பாதுகாப்பு படையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 100 ஜோடி சணல் பாதணிகளை அனுப்பியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இதனால் கோவிலில் தங்களது பணியினை செய்து வருபவர்கள், நடுங்கும் குளிரில் வெறுங்காலோடு இருக்க வேண்டியதில்லை எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்