Skip to main content

ப்ளூவேல் தற்கொலை குறித்து விடைத்தாளில் எழுதிய சிறுவன்!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
ப்ளூவேல் தற்கொலை குறித்து விடைத்தாளில் எழுதிய சிறுவன்!

ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல் சேலஞ்ச், அதைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாகவே இந்தியாவில் பல இளைஞர்களின் வாழ்வைக் குடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த விளையாட்டின் 49 சவால்களை முடித்திருந்த சிறுவன் ஒருவன், அதன் இறுதி சவாலை முடிப்பதற்கு அஞ்சி அதுகுறித்து தேர்வு விடைத்தாளில் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு சிறுவன் பிரவீன் பிரஜாபதி. இவன் கடந்த வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற காலாண்டுத்தேர்வில் சமஸ்கிருத பாடத்திற்கான தேர்வை எழுதியுள்ளான். அதில், தான் மரண விளையாட்டான ப்ளூவேல் சேலஞ்சின் 49 சவால்களை முடித்துவிட்டதாகவும், இறுதி சவாலை முடிக்கவேண்டிய சூழலில் மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் எழுதியுள்ளான். விடைத்தாளைத் திருத்திய ஹேமலதா எனும் ஆசிரியை இதுகுறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மற்றும் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட சிறுவன் பிரஜாபதிக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கி மனதளவில் அவனை மீட்டுள்ளனர். இந்த சவாலை செய்துமுடிக்காவிட்டால், தனது பெற்றோரைக் கொன்றுவிடுவோம் என மிரட்டுவதாக அந்த சிறுவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்