தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. 140 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்க நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முடிவுகள் மே இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஐக்கிய இடது முன்னணி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை எந்தக் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடமால் இருந்து வந்த நிலையில், முதல் ஆளாக கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 76 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 9 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில் வெளியான டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு, கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான ஐக்கிய இடது முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.
ஐந்து மாநில தேர்தல்; அரியணையில் அமரப்போவது யார்? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!