இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.
அதேபோல் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தநிலையில் பெகாசஸ் மென்பொருளை தயாரித்து விற்கும் 'என்.எஸ்.ஓ குரூப்' இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையமைச்சர், என்.எஸ்.ஓ குரூப்'பை தடை செய்ய எந்த திட்டமுமில்லை என தெரிவித்துள்ளார்.