Published on 19/08/2018 | Edited on 20/08/2018
இந்திய பில்லியனர்களில் ஒருவரானவரும், PAYTM நிறுவனருமான ராஜசேகர் கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர் தான் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அதேபோல் நிதியுதவி அளிக்கவிரும்புவோர் PAYTM பயன்படுத்தி நிதியுதவி அளிக்கலாம் என மொபைல் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
மொத்தம் 11,865 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளவரின் மலிவான விளம்பரம் இது, அவருடைய சொத்து மதிப்பிற்கு இது அற்பத்தொகை என அவரை இணையத்தில் விமர்சனங்கள் மூலம் வசைபாடி வந்தனர் இணையவாசிகள். இதனை அடுத்து அந்த பதிவை நீக்கினார் ராஜசேகர்.