Published on 16/09/2022 | Edited on 16/09/2022
ரயில் ஜன்னல் வழியே பயணிகளிடம் செல்போன் திருட முயன்ற திருடனை பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் தொங்க விட்டபடியே பயணம் செய்ய வைத்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பீகார் மாநிலம், பாட்னா ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக, செல்போன் திருட முயற்சித்துள்ளார். அப்போது, சுதாரித்த சக பயணிகள், ஜன்னல் வழியே திருடனின் கைகளை லாவகமாகப் பிடித்தனர். பின்னர், சுமார் 15 கி.மீ. தூரம் ரயிலுக்கு வெளியில் தொங்கவிட்டபடியே பயணம் செய்ய வைத்து அவரை, அடுத்த ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்த காட்சிகள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டும், இப்படி செய்யலாமா என்றும்? திருடனுக்கு சரியான பாடம் என்றும் இரு வகையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
#WATCH | Khagaria, Bihar: Passengers caught hold of a man, kept him hanging outside from a window of a moving train as he allegedly tried to snatch mobile phones from them (15.09) pic.twitter.com/PY71wN2BmD— ANI (@ANI) September 15, 2022