Skip to main content

டேராடூனில் பாகிஸ்தானியர்களுக்கு வக்காளர் அட்டை, ரேஷன் கார்டு....

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
votter id


டேராடூனிலுள்ள மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது, நீண்ட கால விசாவில் தங்கியிருக்கும் 23 பாகிஸ்தானியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலிஸ் முழு விசாரணையை தொடங்கியது, நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, நீண்ட கால வீசாவில் பாகிஸ்தானி சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி  275 பாகிஸ்தானியர்கள் டேராடூனில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

“19 வயதில் தியாகத்தைப் புரிந்துகொண்டேன்” - பிரியங்கா காந்தி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Priyanka Gandhi questioned How much longer will you blame the Congress

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகம், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ராம்நகர் பகுதியில் இன்று (13-04-24) காங்கிரஸ் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (பாஜக) எவ்வளவு காலம் காங்கிரசை குற்றம் சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளனர்; இப்போது அவர்கள் 400 மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்வதால், அவர்களுக்கு பெரும்பான்மை வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தரகாண்டில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் ஆகியவை எப்படி வந்திருக்கும்?. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. ஜவஹர்லால் நேரு இதை உருவாக்கவில்லை என்றால், இது சாத்தியமா?

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைப் பயன்படுத்தித் தலைவர்களை தங்கள் கட்சிக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதால் வேலைவாய்ப்பையும் பணவீக்கத்தையும் மறந்துவிட்டார்கள். அப்போது, ​​தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதும், நன்கொடை பெற்று வியாபாரம் செய்வது குறித்து பிரச்சனை எழுந்தது. இப்போது சொல்லுங்கள் யார் ஊழல்வாதி என்று.

எனது 19 வயதில், என் தந்தையின் சிதைந்த உடலை என் தாய் முன் வைத்தபோது, நான் தியாகத்தைப் புரிந்துகொண்டேன். அவர்கள் என் குடும்பத்தாரை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்தாலும், என் தியாகி தந்தையை அவமதித்தாலும், எங்கள் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்கள் இதயங்களில் இந்த நாட்டின் மீது நம்பிக்கையும், உண்மையான பக்தியும் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.