பாக்., இணையதளத்தை ஹேக் செய்து இந்திய தேசிய கீதத்தை
பதிவு செய்த மர்ம நபர்கள்!
பதிவு செய்த மர்ம நபர்கள்!
பாகிஸ்தான் அரசின் இணைய தளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள், அதில் இந்திய தேசிய கீதத்தையும் சுதந்திர தின வாழ்த்தையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம் முடக்கப்பட்டு, மீண்டும் அது செயல்பாட்டுக்கு வந்தபோது, அதில் இந்திய தேசிய கீதம் பின்னணியில் ஒலிக்க, ஆகஸ்ட் 15க்கு சுதந்திர தின வாழ்த்து பதிவாகியிருந்தது. இதை என்ன செய்வது என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் குழப்பம் அடைந்த நிலையில், டுவிட்டர் மூலம் இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகிவிட்டது.