கேரளாவில் ரயில்வே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
64 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருவனந்தபுரம், காசர்கோடு இடையே புதிய ரயில்வே வழித்தடம் அமைக்க, கேரள அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக, நிலங்களை அளவீடு செய்ய கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி பகுதிக்கு அதிகாரிகள் வந்த போது எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்த போதும், அதனை மக்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து, அனைவரையும் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர் .இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரத்தில், போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தான் தூண்டிவிடுவதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயம் குற்றம் சாட்டியுள்ளார்.