ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதில் பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாக தான் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.