Published on 21/01/2021 | Edited on 21/01/2021

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் நால்வருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.