கர்நாடக மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.க.வினர் மிகத்தீவிரமாக பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால் பிரதமர் மோடி பலமுறை இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று மைசூருவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரச்சாரம் முடிந்து அவர் தங்குவதற்காக லலிதா மஹால் பேலஸ் என்ற பிரம்மாண்ட ஹோட்டலில் தங்குவதற்காக புக் செய்துள்ளனர். ஆனால், திருமண விழாவிற்காக அனைத்து அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டன என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், மூன்று அறைகள் மட்டுமே இருப்பதால் மோடியுடன் வரும் அதிகாரிகள் தங்கமுடியாது என்றும், பாதுகாப்புக் காரணங்கள் கருதியும் ஹோட்டல் நிர்வாகம் அறை தர மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராடிஸன் புளூ என்ற ஹோட்டலில் அறைக்காக பேசியபோது, அங்கு மேற்சொன்ன காரணங்களைக் கூறி அறை தர மறுத்துள்ளனர். பிறகு வேறு வழியின்றி, பா.ஜ.க.வினரே அவர்களிடம் பேசி வேறு ஹோட்டலுக்கு மாற்றியுள்ளனர்.
அரசியல் பிரச்சாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக வரும் மோடி போன்ற முக்கிய பிரமுகர்கள், வெளியில் தங்கமாட்டார்கள் என்றாலும், அதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.