Skip to main content

இனி கூகுள் பயன்படுத்த இன்டர்நெட் தேவையில்லை..!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
google-smartphone-app-


ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் யாரும் கூகுள் ப்ரவுசரை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு கூகுல் க்ரோம் ப்ரவுசர் நம் அன்றாட பயன்பாடுகளில் ஓன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் க்ரோம் ப்ரவுசரை பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது குரோம் ப்ரவுசரை பிரபலப்படுத்தும் நோக்கில் இன்டெர்நெட் இல்லாமல் ஆஃப்லைன் மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இதேபோல், கூகுள் மேப்பை ஆஃப்லைனில் பயன்படுத்தலாம் என்ற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியது.

அதேபோல், தற்போது ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தில் தேவையான தகவல்களை தேடி கொள்ளலாம், தேவையானவற்றை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த புதிய சேவையை முதல்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோம் ஆப்பை அப்டேட் செய்வதன் மூலம் சமீபத்திய பதிப்பை பெற்றுக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்