Skip to main content

நாடளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த நிர்மலா சீதாராமன்

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன்  தொடங்கியது. குடியரசு தலைவர் உரைக்குப் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.

 

இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.2 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவீதமாக  இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்