Published on 01/10/2020 | Edited on 01/10/2020

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் இன்று முதல் அமலாகின்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, வாகன ஓட்டிகள் தங்களது ஆர்.சி.புக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை காரணமாக அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் காகித ஆவணங்களை, வாகன ஓட்டிகள் வைத்திருக்கத் தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்கும் ஆவணங்களே வாகனத் தணிக்கையின்போது செல்லுபடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் ஆவணங்கள் வைத்திருக்கும்போது, காகிதத்தால் ஆன ஆவணங்களை மட்டுமே, வாகன ஓட்டிகள் காண்பிக்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.