புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்துக் கூறலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சக செயலர் அனிதா கார்வால் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "நாளை (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி (11.59 PM) வரை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். https://innovateindia.mygov.in/nep2020/ என்ற இணையதளத்திற்கு சென்று கருத்துக் கூறலாம். ஆசிரியர்களின் கருத்துக்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனர்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.