புதுச்சேரி என்.சி.சி மாணவர்கள்
கடற் சாகச பயணம்;கிரண்பேடி துவக்கி வைத்தார்
புதுச்சேரி என்.சி.சி மாணவர்களின் கடற் சாகச பயணத்தை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியிலிருந்து கடல் வழியாக கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம் தோப்புத்துறை வரை சென்று மீண்டும் புதுச்சேரி திரும்புகின்றனர். புதுச்சேரி - தோப்புத்துறை - புதுச்சேரி என 456 கிமீ தூரம் பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த போது,
’’நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டமன்றத்தில் இடமளிக்காதது துரதிஷ்டமான முடிவு. இதனை சபாநாயகர் தவிர்த்திருக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றேன். அவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார். மேலும் " புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதால் அதனை சுத்தம் செய்ய பலகோடி ரூபாய் மக்கள் பணம் செலவழிக்கப்படுகின்றது. இதனை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு தேவை’’ எனவும் அவர் கூறினார்.
- சுந்தரபாண்டியன்