Skip to main content

மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் யார்,யார் கலந்துகொள்கின்றனர்...

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது பாஜக.
 

narendramodi

 

இதைத்தொடர்ந்து நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 30ஆம் நாள், இரவு 7 மணிக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.  இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதற்காக அவர்கள் வியாழக்கிழமை காலை புறப்படுகின்றனர். மேலும் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதனால் குடியரசு தலைவர் மாளிகை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்