பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பனிக்குகையில் சாமி தரினம் செய்தார். கேதார்நாத் குகையில் தியானம் மற்றும் வழிபாடு செய்தார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி, 18 மணி நேர தியானத்துக்குப் பின்னர் குகையை விட்டு வெளியே வந்தார். காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கேதார்நாத் கோயிலில் வழிபட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் இடையே உணர்வுப் பூர்வமான சிறப்பு தொடர்பு உண்டு. கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக முழுநேரமும் பணியாற்றி வருகிறேன். இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிராத்தனை செய்தேன். நான் கடவுளிடம் எனக்காக என்று எதுவுமே கேட்கவில்லை என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை பிரதமர் கேதார்நாத் கோயிலுக்கு வந்து சாமி தரசனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (19.05.2019) நடக்கிறது. இதற்கான பிரசாரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இந்தநிலையில்தான் பிரதமர் மோடி சனிக்கிழமை கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.