Skip to main content

"சொல்லவே வருத்தமாக இருக்கிறது" - ராகுல் காந்தியை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் நட்டா...

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

nadda about rahul gandhi

 

பாதுகாப்புத்துறைக்கான நடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஒரு முறைகூட பங்கேற்கவில்லை என பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார். 

 

இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்துள்ளது. இந்த எல்லைப் பிரச்சனையை மையமாக வைத்து மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பா.ஜ.க. தலைவர் நட்டா, "ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத் துறைக்கான நடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக்கு உள்ளாக்குகிறார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்று செய்யமாட்டார். ராகுல்காந்தி புனிதமான அரசபரம்பரையில் வந்தவர். நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியில் தகுதியான பல உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அந்த வாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒருபோதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இது வேதனை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்