Published on 14/12/2018 | Edited on 14/12/2018

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்பி நரமல்லி சிவபிரசாத் பல்வேறு வேடம் தரித்து பாராளுமன்றத்தின் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஏற்கனவே இவர் நாரதர், கிருஷ்ணர், பரசுராமர், அன்னமய்யா, புட்டபர்த்தி சாய்பாபா, அம்பேத்கர், ராமர் போன்ற பல்வேறு வேடங்கள் போட்டு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் போன்று வேடமிட்டு நாடாளுமன்றம் வந்திருந்தார். கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு என வீல் சேரில் அமர்ந்தபடி கையசைத்து வந்த அவர் வளாகத்தில் நடந்த போராட்டத்திலும் பங்கு பெற்றார்.