இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் மோல்னுபிரவீர் என்ற மாத்திரைக்கு இந்தியாவில் அவசரக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டது. கரோனா தொற்று யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறதோ அவர்களுக்கு, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படவுள்ள இந்த மாத்திரை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐந்து நாட்களுக்கான மோல்னுபிரவீர் மாத்திரை விலையை 1,400 ஆக டாக்டர் ரெட்டி’ஸ் லேபரேட்டரிஸ் நிர்ணயித்துள்ளது. மேலும் இந்த மோல்னுபிரவீர் மாத்திரை அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதுமுள்ள மருந்தகங்களில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரிஸ் கூறியுள்ளது.
அதேநேரத்தில் டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரிஸ் நிறுவனத்தை தவிர வேறு சில மருந்து நிறுவனங்களும் மோல்னுபிரவீர் மாத்திரையை தயாரித்து விற்பனை செய்யவுள்ளன. இதனால் இந்தியாவில் மோல்னுபிரவீர் மாத்திரையின் விலை குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.