2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற மோடி கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என்று 46 பேருடன் பொறுப்பேற்றார். மன்மோகன் சிங் அரசில் 71 பேர் இருந்ததாகவும், தான், குறைவான அமைச்சர்களுடன் செலவை குறைத்து, நிறைவான நிர்வாகத்தைக் கொடுக்கப் போவதாக பீற்றினார்.
ஆனால், 2016ல் அவருடைய அமைச்சரவையின் எண்ணிக்கை மொத்தம் 77 ஆகியது.
இந்த அமைச்சர்களில், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, சுரேஷ் பிரபு, ரவிசங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவடேகர், பியுஷ் கோயல், தாவர் சந்த் கெலாட், ராஜீவ் சந்திரசேகர், எம்.ஜே.அக்பர், நாராயண் ரானே, விஜய் கோயல் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமன எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் அமைச்சராக தகுதியானவர்கள் இல்லை என்பது பெரிய துரதிருஷ்டம்தானே என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.