Skip to main content

இசுலாமியர்களுக்கு பிடித்த வேட்பாளராக மோடி இருப்பார்- ஷாநவாஸ்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
shanawaj

 

பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசேன் சமீபத்தில் மோடி பற்றி கூறியுள்ளதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி நின்றபோது, அவர் இசுலாமியர்களுக்கு எதிராக செயல்படுவார் என்று சில கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பின் பிரதமர் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இசுலாமியர்களுக்கு எதிராக இதுவரை எந்தஒரு அறிக்கையும் வெளியிட்டது இல்லை. பிரதனர் மோடி இந்தியா நாட்டிலுள்ள அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறார். இசுலாமியர்கள் பிந்தங்கி இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம். அந்த கட்சி இசுலாமியர்களுக்கு அநீதி இழைத்துள்ளது. இசுலாமியர்களுக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடிதான் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் இசுலாமியர்களுக்கு பிடித்தமான பிரதமர் வேட்பாளாரக மோடி இருப்பார் என்றார்.

 

சார்ந்த செய்திகள்