வாழ்க்கையில் சில விஷயங்களை நேரடியாக யூகிக்கமுடியாது. தற்போதுள்ள நவீனத்துவமான வாழ்க்கையில் அதனை கூட அறிவியல் உதவியோடு தோராயமாக சில சம்பவங்களை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால், அதையும் மீறி சில விஷயங்கள் விஞ்ஞானத்துக்கே சவால் விடும் நிகழ்வும் நடந்து வருகிறது. அதே போன்று சில நேரங்களில் எதார்த்தமாக செய்யும் செயல்கள் கூட திடீர் வைரலாகிவிடும். அந்த வகையில் சிறுமிகளின் ஓட்டப்பந்தய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயம் ஒன்றில் சிறுமிகள் வேகமாக எல்லைக்கோட்டை நோக்கி ஓடி வருகின்றனர். இருபுறமும் விளையாட்டு ஆசிரியர்கள் நின்று சிறுமிகளின் ஓட்டத்தை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
முதல் பரிசே மூணு வாங்க வேண்டி வரும் போலயே pic.twitter.com/f567Cg6VTe
— முகிலன் ™ (@MJ_twets) October 4, 2019
இந்தநிலையில் எல்லைக்கோட்டை நெருங்கும் போது சிறுமிகள் மூவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி எல்லைக்கோட்டை தாண்டுகின்றனர். மூவரும் ஒரே நேரத்தில் எல்லை கோட்டை தாண்டுவதால் முதல் பரிசே மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமா? இல்லை முதலில் இருந்து சிறுமிகளை ஓடி வர சொல்ல வேண்டுமா? என்ற விவாதம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் பரிசை யாருக்கு கொடுக்கணும்னு நீங்க நெனைக்கறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க பார்ப்போம்..!