Published on 29/04/2019 | Edited on 29/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் நடந்து வருகின்றது. இதனையடுத்து அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மம்தா மற்றும் அவரது கட்சியை தாக்கி பேசினார். அப்போது பேசிய அவர், "மம்தா அவர்களே, மே 23 வரை பொறுத்து கொள்ளுங்கள். அன்றைய தினம் நாடு முழுவதும் தாமரை மலரும். உங்கள் கட்சி எம்.எல்.ஏ க்களே உங்கள் கட்சியை விட்டு விலகுவார்கள். உங்கள் கட்சியில் உள்ள 40 எம்.எல்.ஏ க்கள் இப்போது வரை என்னுடன் தொடர்பில் உள்ளனர்" என கூறினார்.