Published on 07/09/2019 | Edited on 07/09/2019
சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.
உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 தரையிறக்கம் தடைபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து உரையாற்றினார். அதன்பின் பிரதமர் மோடி அங்கிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் போது, இஸ்ரோ தலைவர் கே.சிவன் கண் கலங்கினார். சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.