டெல்லியில் நேற்று சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவருடைய ஆட்சியில் இயங்கும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் பற்றி கூறினார். பின்னர், ‘இந்தியாவுக்கான ஒரு பார்வையை சுதந்திரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதி கனவு கண்டார். அனைத்து விதமான அடிமைத்தனத்தில் இருந்தும் விடுபடுவதற்கான வழியை இந்தியா உலகிற்கு காட்டும் என அவர் கூறி இருக்கிறார்’ என்று தெரிவித்த மோடி மேலும் ‘பாரத சமுதாயம்’ என்னும் தலைப்பில் இருக்கும் அந்த கவிதையை தமிழில் வாசித்து பின்னர் ஹிந்தியில் மொழி பெயர்த்தார்.
During the address from the Red Fort this morning, remembered these words of the great Subramania Bharati. pic.twitter.com/2jCN7qAvzZ
— Narendra Modi (@narendramodi) August 15, 2018
பாரதி எழுதிய அந்த கவிதையை மோடி வாசித்து ஹிந்தியில் மொழிபெயர்த்தது இதுதான்..
“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்;
இந்தியா உலகிற் களிக்கும்.
விழாவில் பேசியதை தொடர்ந்து, அந்த வீடியோ காட்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.