டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நேற்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.
விழாவில், எல். முருகன், மீனாட்சி லேகி, அன்னபூர்ணாதேவி, நாராயணசுவாமி, கவுசல் கிஷோர், அஜய் பட், பி.எல். வர்மா, அஜய்குமார், சவுகான் தேவ்சிங், பக்வந் கவுபா, கபில் மோரேஷ்வர் படேல், பிரதிமா பவுதிக், சுப்ஹஸ் சர்கார், பக்வத் கிஷன்ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், வீரேந்திர குமார், பாரதி பிரவின் பவார், பிஷ்வேஸ்வர், சாந்தனு தாக்கூர், முஞ்சப்பரா மகேந்திர பாய், ஜான் பர்லா, நிதிஷ் பிரமானிக், ஜோதிராதித்ய சிந்தியா, சோனாவால், நாராயண் ரானே, கிஷன் ரெட்டி, ராமச்சந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ, பசுபதி குமார் பாரஸ், ராஜ்குமார் சிங், ஹர்தீப்சிங் பூரி, மன்சுக் மாண்டாவியா, பூபேந்தர், புருஷோத்தம் ரூபாலா, அனுராக் தாக்கூர், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா சிங் படேல், சத்யபால் சிங் பாகல், ராஜீவ் சந்திரசேகர், சோபா, பானுபிரதாப் சிங் வர்மா, தர்ஷனாவிக்ரம் ஜர்தோஷ் ஆகிய 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தப் புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.